புதுச்சேரி

புதுச்சேரி விமான நிலையத்தில் பயணிகளுக்கு திலகமிட்டு, மலர் வழங்கி பாரம்பரிய வரவேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையத்தில் ‘யாத்ரி சேவா அபியான்’ திட்டத்தின் கீழ் வருகை தந்த பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திலகமிட்டும், வண்ண மலர்கள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) புதுச்சேரி விமான நிலையத்தில், பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் இனிமையாகவும் சிறப்பானதாகவும் மாற்றும் நோக்கில் இந்த சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விமானத்தில் பயணம் மேற்கொண்ட மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்த பயணிகளை விமான நிலையப் பணியாளர்கள் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்வித்தனர்.

பயணிகளின் சேவையை மேம்படுத்தவும், நமது பாரம்பரிய விருந்தோம்பலை வெளிப்படுத்தவும் இந்த ‘யாத்ரி சேவா அபியான்’ முன்னெடுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய நிர்வாகத்தின் இந்த அன்பான மற்றும் எளிய வரவேற்பு நிகழ்வு, பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன