புதுச்சேரி

புதுச்சேரியில் 12 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா கோலாகல தொடக்கம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!

புதுச்சேரி, ஆக. 28:

புதுச்சேரி லாஸ்பேட்டையில் புத்தகப் பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 12 நாட்கள் நடைபெறும் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா இன்று விமரிசையாகத் தொடங்கியது.

லாஸ்பேட்டையில் அமைந்துள்ள வாழ்வாதார வள மையத்தில் (Livelihood Resource Centre) நடைபெற்ற தொடக்க விழாவில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் பி. ராஜவேலு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வி.பி. சிவகொழுந்து ஆகியோர் கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியை முறைப்படி குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

இப்புத்தகத் திருவிழாவானது புதுச்சேரி புத்தக மையம் மற்றும் பாரதி பதிப்பகம் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு முன்னணிப் பதிப்பகங்களின் தலைசிறந்த நாவல்கள், இலக்கியப் படைப்புகள், வரலாற்று நூல்கள் மற்றும் மாணவர்களுக்கான போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இன்று தொடங்கி தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவிற்குப் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வாசகர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் பெருமளவில் வருகை தந்து பயன்பெறுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன