புதுச்சேரி

புதுச்சேரி சட்டமன்ற முடக்கத்தைக் கண்டித்து பந்த் போராட்டம்: எம்.எல்.ஏ நேரு எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் போலி மருந்து உற்பத்தி மற்றும் மருந்து மாபியாக்கள் அதிகரித்து வருவதற்கு அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே காரணம் என நேய மக்கள் கழகத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நேரு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அமைச்சர்கள் பதவியேற்று 3 மாதங்களாகியும் இலாக்கா ஒதுக்கீடு செய்யப்படாமலும், சபாநாயகர் தேர்தல் நடத்தப்படாமலும் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதைக் கண்டித்து ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ள அவர், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுமக்கள் மற்றும் அமைப்புகளைத் திரட்டி பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

In brief (English)

MLA Nehru warned of a statewide bandh in Puducherry if the government fails to address portfolio delays, speaker elections, and fake medicine manufacturing.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *