புதுச்சேரி

மேட்டுப்பாளையத்தில் லாரி மோதி 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று மாலை நடந்த சாலை விபத்தில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஹர்ஷவி உயிரிழந்தார்.

பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹர்ஷவியை, பின்னாலிருந்து வந்த லாரி ஒன்று மோதியது. அருகிலிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸில் அருகாமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனளிக்காமல் ஹர்ஷவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாணவியின் மரணம் மேட்டுப்பாளையம் மக்கள், பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரை விசாரித்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *