புதுச்சேரி
மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் புதிய மின்மாற்றி ரவிக்குமார் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்
சேதராப்பட்டு: மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் மின் பற்றக்குறையை போக்கும் நோக்கில், முதலமைச்சர் ரங்கசாமியின் நடவடிக்கையின் படி ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இதனை ரவிக்குமார் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன்கள் பாலமுருகன், ரேவதி பற்குணன், செயற் பொறியாளர் உமேஷ் சந்திரா, இளநிலைப் பொறியாளர் போனேஷ்வரன், மின்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

