தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித அனுமதியும் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் அளிக்கப்பட்ட பதில் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீழ்பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேலமைந்துள்ள மாநிலங்கள் அணைகட்ட முடியாது என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில் காவிரி உரிமையை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tamil Nadu Chief Minister Vijay has written a letter to Prime Minister Narendra Modi urging him not to grant any permission to Karnataka for constructing a dam across Mekedatu. The letter follows a written reply in Parliament by Union Minister Rajbhushan Choudhary, which sparked outrage in Tamil Nadu. The CM stressed that lower riparian states’ consent is vital before implementing projects affecting water flow. Meanwhile, Leader of Opposition Udhayanidhi criticized the state government for delaying action and endangering Tamil Nadu’s water rights. Other political leaders including Anbumani Ramadoss and TTV Dhinakaran have demanded an all-party meeting to decide the next course of action.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *