புதுச்சேரி
துணைநிலை ஆளுநர் சுதந்திர தின வாழ்த்து

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் க. கைலாஷ்நாதன் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாட்டின் மக்களை ஒன்றிணைத்த ‘வந்தே மாதரம்’ முழக்கத்தின் 150-வது ஆண்டை நாடு கொண்டாடுவது சிறப்புமிக்க தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை போற்றும் வகையில், பொதுமக்கள் அனைவரும் ‘வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசப்பற்று, தேசிய ஒற்றுமை மற்றும் வலுவான, வளமான வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் உறுதியை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்ற வேண்டும் என துணைநிலை ஆளுநர் க. கைலாஷ்நாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
