சிவகங்கையில் லட்சிய ஜனநாயக கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

சிவகங்கை, ஆக. 22: தேவகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லட்சிய ஜனநாயக கட்சியின் சிவகங்கை கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்த அறிமுகக் கூட்டத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமை தாங்கி வழிநடத்தினார். இந்நிகழ்வில் லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினார். மாவட்ட அளவில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் உட்பட சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் களப்பணிகள் குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய நிர்வாகிகள் நியமனத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.



