புதுச்சேரி

புதுச்சேரியில் அமித் ஷா நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: திமுக கண்டனம்

புதுச்சேரி, ஆகஸ்ட் 11: புதுச்சேரியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, திமுக கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அமித் ஷா ஆகஸ்ட் 8-9 தேதிகளில் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்தார். அவர் புதுச்சேரி காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடியை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர், ‘ஹர் கர் திரங்கா’ பேரணியையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து திமுக மாநில அமைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டை அவமதிக்கும் வகையில் இந்தச் செயல் உள்ளது. புதுச்சேரி போன்ற தமிழ் பேசும் பகுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன