புதுச்சேரி

அரசு வேலை வாங்கித் தருவதாக ₹5 லட்சம் மோசடி: ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை

புதுச்சேரி சாரம் பெண்ணிலா நகரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரது மனைவிக்கு தமிழக கல்வித் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக அவரது நண்பர் சிலம்பரசன் கூறியுள்ளார். கல்வித்துறை அமைச்சரின் உதவியாளராக இருப்பதாகக் கூறி நம்ப வைத்த அவர், பல தவணைகளாக ₹5 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

In brief (English)

Puducherry police booked a man named Silambarasan for duping a couple of Rs 5 lakh after promising a government job in Tamil Nadu.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *