கல்வி & வேலைவாய்ப்பு

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் சென்டாக் சேர்க்கை சான்றிதழ் வழங்கும் விழா

புதுச்சேரி, ஆக. 17: புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் சென்டாக் (CENTAC) வாயிலாகச் சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, கல்லூரி வளாகத்தில் உள்ள மகாகவி பாரதிதாசனின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, சென்டாக் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்குச் சேர்க்கை சான்றிதழ்களை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வழங்கினார்.

சான்றிதழ் பெற்ற மாணவிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர், கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன