தமிழ்நாடு

காலை உணவுத் திட்டப் பெயர் மாற்றம்: எ.வ.வேலு கேள்வி, அமைச்சர் ராஜ்மோகன் பதில்

அரசுத் திட்டங்களின் பெயர்களை மாற்றுவது புதிதல்ல; திமுக ஆட்சிக் காலத்திலும் அவ்வாறு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் எ.வ. வேலு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், திட்டத்தின் பெயர் மாற்றம் மட்டுமல்லாமல் அதன் பயனாளிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணியை நினைவுகூரும் வகையில், காலை உணவுத் திட்டத்துக்கு அவரது பெயரைச் சூட்டியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். “காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயரைத் தவிர வேறு பொருத்தமான பெயர் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் கூடுதலாக 15.14 லட்சம் மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.710 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரைச் சூட்டினால், அதை முழுமனதாக வரவேற்று பாராட்டுவோம் என முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ பெயரை மாற்றி காமராஜரின் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார். காமராஜரின் பெயருக்கு திமுக எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்காக ரூ.232.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன