தமிழ்நாடு
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் விஜய் நன்றி
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொதுநிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்ததற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்தார். தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டு பெருமையைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் கூறினார்.

