புதுச்சேரி

எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிமிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் மனு!

காரைக்கால்: காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிமிடம் கிராம பஞ்சாயத்தார்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

காரைக்கால் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரம், மீன்பிடி தொழில் சார்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் கிராம மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து கிளிஞ்சல்மேடு கிராம பஞ்சாயத்தார்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிமை நேரில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, மீனவ கிராமத்தின் நீண்ட நாள் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை விரிவாக விளக்கி கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவைப் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், இக்கோரிக்கைகள் தொடர்பாக சட்டமன்றத்திலும், உரிய அரசுத் துறை அதிகாரிகளிடமும் பேசி விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன