தமிழ்நாடு
இங்கிலாந்திலிருந்து மீட்கப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் சிலை: முதல்வர் தலைமைச் செயலகத்தில் பார்வையிட்டார்!

சென்னை, ஆக. 18:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, இங்கிலாந்து நாட்டிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்டுக்கொண்டு வரப்பட்ட இப்புனிதமான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில் நேரில் பார்வையிட்டார்.
வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கலைப் பொக்கிஷங்கள் மற்றும் திருவுருவச் சிலைகளைத் தொடர்ந்து மீட்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இச்சிலை மீட்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


