புதுச்சேரி
புதுச்சேரியில் ஆனைமுத்து 100 நூல் அறிமுக விழா: அமைச்சர் பெ.இராசவேலு பங்கேற்பு

புதுச்சேரி, ஆக. 19: ஆனைமுத்து 100 நூல் அறிமுக விழா புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.இராசவேலு கலந்து கொண்டு நூல்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் நூல் பதிப்பாசிரியர் பச்சிலை, தூ.சடகோபன், ஓவியர் அன்பழகன், ஓவியம் தமிழ்ச்செல்வி, படைப்பாளி பைரவி மற்றும் புதுவைத் தமிழ்நெஞ்சன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆனைமுத்துவின் படைப்புகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நூலாசிரியர் ஆனைமுத்துவின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், திரளான புத்தக ஆர்வலர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

