புதுச்சேரி
புதுச்சேரியில் ஹர் கர் திரங்கா யாத்திரையை அமித் ஷா தொடங்கி வைத்தார்

இந்திய தேசியக் கொடியான திரங்கா, நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றப் பயணத்தை ஊக்குவிக்கும் அழியாத பிணைப்பின் அடையாளம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற ‘ஹர் கர் திரங்கா யாத்திரை’யை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று, வளர்ந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.
நாட்டின் ஒற்றுமை, தேசப்பற்று மற்றும் வளர்ச்சி இலக்குகளை இளைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.





