தேசியம்
‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரம்: டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றம்

புது தில்லி, ஆகஸ்ட் 13: இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘ஹர் கர் திரங்கா’ (Har Ghar Tiranga) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 13) புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தின் கீழ், என் இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்தப் பிரச்சாரம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் தேசிய உணர்வு மற்றும் பெருமையை வலுப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

