புதுச்சேரி
அமித் ஷாவுக்கு ஹம்பி லட்சுமி நரசிம்மர் ஓவியம் பரிசு

ஹம்பியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லட்சுமி நரசிம்மர் சிலையை மையமாகக் கொண்டு ஓவியர் ரமேஷ் சேதுராமன் உருவாக்கிய ஓவியம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஓவியத்தை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வழங்கினார்.
விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிற்பங்களில் லட்சுமி நரசிம்மர் சிலையும் ஒன்றாகும். பின்னர் நிகழ்ந்த படையெடுப்புகளால் சில சேதங்களைச் சந்தித்தபோதும், இந்திய நாகரிகத்தின் மனவலிமை மற்றும் நிலைத்திருக்கும் ஆற்றலின் அடையாளமாக அந்தச் சிற்பம் இன்றும் விளங்குகிறது.
