தமிழ்நாடு

மதுராந்தகம் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்

சென்னை, அக்டோபர் 20: மதுராந்தகம் தொகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

அதன்படி, அச்சரப்பாக்கத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரியும், மதுராந்தகம் ஏரியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காவும் அமைக்கப்படும் என அவர் அறிவித்தார். மேலும், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு, அறிவுசார் மையம், பெண்களுக்கான தங்கும் விடுதி மற்றும் வாரச்சந்தை ஆகியவையும் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தாராபுரம் தொகுதியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், இலவச வீட்டுமனை பட்டா, நீர்தேக்க தொட்டிகள் மற்றும் புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன