காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார்: எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் பங்கேற்பு!
காரைக்கால், அக். 19:
காரைக்காலில் புகழ்பெற்ற அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்ட கொலு தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.எம்.எச். நாஜிம் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு ஆன்மிக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட கொலு தர்பாரை எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் பார்வையிட்டு, அமைப்பாளர்களின் பக்தி நெறியிலான பணிகளைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் ஆலய நிர்வாக அதிகாரி குமாரசிவம், முன்னாள் ஆலய தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள், பக்தர்கள் பலர் உடனிருந்து சிறப்பித்தனர்.



