புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: மதியம் 3 மணி நிலவரப்படி 68.91% வாக்குகள் பதிவு!

புதுச்சேரி, அக். 06:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்று மதியம் 3.00 மணி நிலவரப்படி தட்டாஞ்சாவடி தொகுதியில் 68.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை முதலே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததால் வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது.

தொகுதி முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்ய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை வாக்குப்பதிவு முடியும் வரை பொதுமக்கள் அனைவரும் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் எனத் தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன