ஆரோவில் சர்வதேச நகருக்கு பிரான்ஸ் உயர்மட்டக் குழு வருகை: கல்வி, கலாச்சார ஒத்துழைப்பு குறித்து விரிவான ஆலோசனை!

புதுச்சேரி:
சர்வதேச நகரமான ஆரோவில்லில் எதிர்கால கட்டமைப்பு வளர்ச்சி, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் கல்விசார் புதிய முன்னெடுப்புகள் குறித்து விரிவாக ஆராயும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் உயர்மட்டக் குழுவினர் ஆரோவில் அறக்கட்டளைக்கு (Auroville Foundation) சிறப்பு வருகை புரிந்தனர்.
ஆரோவில் வருகை தந்த பிரான்ஸ் தூதுக்குழுவினர், சர்வதேச நகரின் ஆன்மீக மையமாகத் திகழும் மாத்ரிமந்திர் (Matrimandir) வளாகத்திற்கு முதலில் சென்றனர். அங்குள்ள அமைதியான தியானச் சூழலையும் அதன் கட்டமைப்பு நேர்த்தியையும் பார்வையிட்டு வியந்தனர். இதனைத் தொடர்ந்து, ஆரோவில் அறக்கட்டளையின் மூத்த அதிகாரிகளுடன் குழுவினர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், ஆரோவில் பார்வையாளர் மையத்திற்குச் (Auroville Visitor’s Centre) சென்ற பிரதிநிதிகள், மனித ஒருமைப்பாடு, நீடித்த மற்றும் நிலையான வாழ்வியல் சூழல் (Sustainable Living) மற்றும் தொடர் கல்வி ஆகிய உன்னத நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் மாதிரிகளை நேரில் பார்வையிட்டுப் பாராட்டினர்.
முற்போக்கான கற்றல் முறைகள், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் நோக்கில் பிரான்ஸ் குழுவினரின் இந்த வருகை இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக அமைந்துள்ளது என்று ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)



