தமிழ்நாடு

காந்தி, சாஸ்திரி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்: கிண்டியில் செல்வப்பெருந்தகை மரியாதை

சென்னை: அண்ணல் மகாத்மா காந்தியடிகள், முன்னாள் பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள நினைவு மண்டபங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று, கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 51-வது நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள காமராஜர் நினைவு மண்டபத்திற்குச் சென்று பெருந்தலைவர் காமராஜரின் உருவப்படத்திற்கும் அவர் மரியாதை செலுத்தினார்.

இந்த அஞ்சலி நிகழ்வில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அமைப்புச் செயலாளர் ராம் மோகன், டி.ஏ. அசோகன், தென் சென்னை மாவட்ட தலைவர் ஜோதி பொன்னம்பலம், துறைமுகம் ரவிராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன