புதுச்சேரி

நாம் அளிக்கும் வாக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்: தட்டாஞ்சாவடி தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு!

புதுச்சேரி, செப். 27: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து முதலமைச்சர் ந.ரங்கசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

குண்டுபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயப் பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டிய முதலமைச்சர் ரங்கசாமி, அப்போது பேசுகையில், மக்கள் யாருக்கு ஆதரவு அளித்தால் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நல்லது செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

நாம் செலுத்தும் வாக்கு தொகுதிக்கும் மக்களுக்கும் உண்மையான பயனைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மேலும் பல புதிய வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வரவும், தொகுதியின் கட்டமைப்பை மேம்படுத்தவும் அசோக் ஆனந்தின் வெற்றி அவசியம் என வலியுறுத்தினார்.

அசோக் ஆனந்த் நன்கு படித்த பண்பாளர் என்றும், தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து மக்கள் சேவையாற்றி வருபவர் என்றும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தட்டாஞ்சாவடி தொகுதி மேலும் வளர்ச்சியடைய அவருக்கு ‘ஜக்’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தொகுதி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன