புதுச்சேரி

புதுச்சேரி கடலில் ‘MODI 25’ வடிவில் அணிவகுத்த படகுகள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு மீனவர்கள் பிரம்மாண்ட வாழ்த்து!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மகத்தான மக்கள் சேவை மற்றும் சாதனைகளைப் போற்றும் வகையில், புதுச்சேரி கடற்கரையில் மீனவர்கள் விநோதமான முறையில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலைக்குப் பின்புறம் உள்ள கடற்பகுதியில், ஏராளமான மீன்பிடி படகுகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘MODI 25’ என்ற லோகோ வடிவில் அணிவகுக்கச் செய்யப்பட்டு இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியின் பாரம்பரியமிக்க கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழைய கலங்கரை விளக்கத்திலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் (BL Santhosh) மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் இணைந்து கொடியசைத்து இந்த அணிவகுப்பைத் தொடங்கி வைத்தனர்.

கடலில் ‘MODI 25’ வடிவில் மிதந்தவாறு மீனவர்கள் நிகழ்த்திய இந்த கண்கவர் அணிவகுப்பு, கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. பிரதமரின் மக்கள் நலப் பணிகளுக்கு மீனவ சமுதாய மக்கள் தங்களது மனமார்ந்த ஆதரவையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த பிரம்மாண்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன