புதுச்சேரி

பெரம்பை இளம்பெண் ஜெயஸ்ரீ படுகொலை: குற்றவாளியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி விசிக ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி:
பெரம்பை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீயை, கலைக்குமார் என்பவர் காதலிக்க வற்புறுத்தி கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி கலைக்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி முதன்மைச் செயலாளர் பெரு. அரிமாத்தமிழன், வானூர் தொகுதி மாவட்டச் செயலாளர் பொன்னிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன