பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்: புதுச்சேரி ஜிப்மரில் பாஜகவினர் ரத்ததானம்!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, அவரது 25 ஆண்டுகால பொதுச்சேவை சாதனைகளை சிறப்பிக்கும் வகையில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ திட்டத்தின் கீழ் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். பாஜக நிர்வாகி ரமணா டி. சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் முகாமில் கலந்துகொண்டு நேரடியாக ரத்ததானம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பிரதமரின் பிறந்தநாளை மக்கள் சேவையாகக் கொண்டாடும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையுடன் இணைந்து அவசர சிகிச்சை மற்றும் ஏழை எளிய நோயாளிகளின் தேவைக்காக இந்த ரத்ததான முகாம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.