தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்து எம்.எல்.ஏ. டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் தீவிர வாக்குச்சேகரிப்பு!

தாராபுரம்:
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருமதி கே. பானுமதி அவர்களுக்கு ஆதரவாக, லால்குடி சட்டமன்ற உறுப்பினரும், அஇஅதிமுக மாநில மகளிரணி இணைச் செயலாளருமான டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ. தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குச் சேகரித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க நடைபெற்ற இப்பிரச்சாரத்தில், தொகுதிக்குட்பட்ட முக்கியப் பகுதிகளில் வீடு வீடாகவும், பொதுமக்களை நேரடியாகவும் சந்தித்து அதிமுகவின் சாதனைகளையும் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் ஆதரவு திரட்டினார்.
இந்தத் தேர்தல் களப் பிரச்சார நிகழ்வில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டனர்.


