தமிழ்நாடு

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு!

வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழ்நாட்டில் சராசரியாக 44 சென்டிமீட்டர் மழை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட கணிசமாக அதிகரித்து 50 முதல் 60 சென்டிமீட்டர் வரை மழை பொழிவு பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, வரும் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன