காரைக்கால்

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி வெள்ளி விழா: அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!

காரைக்கால்: காரைக்கால் நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி விழாவினை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மேலும், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம், நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் மற்றும் காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். நாஜிம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காரைக்கால் பிராந்தியத்தில் ஆசிரியப் பெருமக்களை உருவாக்கும் உயரிய கல்விப் பணியில் கடந்த 25 ஆண்டுகளாக இக்கல்லூரி ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டிய தலைவர்கள், மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்திற்கு நற்பணியாற்ற வேண்டும் என வாழ்த்தினர். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன