புதுச்சேரி

அமைச்சர் பெ.இராஜவேலு, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிமை சந்தித்த புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்!

புதுச்சேரி: புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து மற்றும் பொருளாளர் கலைமாமணி பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் புதுச்சேரி அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு பெ.இராஜவேலு அவர்களை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல், புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் அவர்களையும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

இச்சந்திப்பின் போது, புதுவையில் தமிழ் மொழி, இலக்கியம், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மற்றும் தமிழ்ச் சங்கத்தின் முன்னெடுப்புகள் குறித்து முக்கியக் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன