புதுச்சேரி

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள்: பொறியாளர் தின விழா உற்சாகக் கொண்டாட்டம்!

புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில், பாரத ரத்னா சர். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளையொட்டி பொறியாளர் தின விழா பொதுப்பணித்துறை கருத்தரங்கக் கூடத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

இவ்விழாவிற்கு ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளரும் உதவிப் பொறியாளருமான எழில்வண்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

விழாவில் சர். விஸ்வேஸ்வரய்யா திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் பக்தவச்சலம், சீனிவாசன், சுந்தரி, பீனாராணி, ஓய்வுபெற்ற கண்காணிப்புப் பொறியாளர் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன், உதவிப் பொறியாளர்கள் வெங்கடேசுவரன், பாலாஜி, சங்கர் உள்ளிட்ட ஏராளமான உதவி மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன