மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஐ(எம்), சிபிஐ வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு!

சென்னை, 15/9/2026:
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில், இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் அறிமுகக் கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான ‘பி.ஆர். நினைவகத்தில்’ நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன், சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் தோழர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்ட இடதுசாரி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு வேட்பாளர்களை முறைப்படி அறிமுகம் செய்து வைக்கவுள்ளனர்.


