புதுச்சேரி

சாலமன் பாப்பையா மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு: புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல்!

புதுச்சேரி: பத்மஸ்ரீ பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்மஸ்ரீ பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். எளிய முறையில் தமிழையும் திருக்குறளையும் பட்டிமன்றக் கலை வழியாக பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்த அவரது தொண்டு என்றென்றும் நினைவுகூரப்படும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், தமிழ் இலக்கியத்திற்கும் பட்டிமன்ற மேடைகளுக்கும் பெருமை சேர்த்த சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் துணைநிலை ஆளுநர் பதிவு செய்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன