புதுச்சேரி

புதுச்சேரியில் திராவிட கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து முழக்கம்!

புதுச்சேரி: மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், ஒன்றிய பாஜக அரசு சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கண்டித்து புதுச்சேரியில் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சிவ. வீரமணி முன்னிலை வகித்தார். இதில் திராவிட கழகத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு, ஒன்றிய அரசைக் கண்டித்து தீவிர கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சமூக நீதிக்கு எதிராக ஒன்றிய அரசு சதி செய்வதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் குற்றம்சாட்டினர். அனைத்துத் தரப்பு மக்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன