புதுச்சேரி

ஹஜ் பயணிகளுக்குத் தனியாக நிதி ஒதுக்கி உதவித்தொகை வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு அரசு வழங்கி வந்த நிதியுதவி வழங்கப்படவில்லை என்று சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், இஸ்லாமியர்களின் முக்கிய ஆன்மீகக் கடமையான புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது சுட்டிக்காட்டினார். இதனால் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

மேலும், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான நிதியுதவியை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பெயரளவில் வழங்கக் கூடாது என்றும், இதற்கென சம்பந்தப்பட்ட துறை மூலம் தனி நிதி ஒதுக்கீடு செய்து தகுதியான பயணிகளுக்கு முறைப்படி வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பேரவையில் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன