புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அசோக் ஆனந்த் வெற்றி பெறுவார்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ‘ஜக்’ சின்னத்தில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் மகத்தான வெற்றி பெறுவார் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் என். ரங்கசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தட்டாஞ்சாவடி தொகுதி எப்போதும் என்.ஆர். காங்கிரஸ் பேரியக்கத்தின் எஃகு கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது என்றும், இத்தொகுதி மக்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இத்தேர்தலில் ‘ஜக்’ சின்னத்தில் போட்டியிடும் அசோக் ஆனந்துக்கு தொகுதி மக்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவு அலை நிலவுவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், தொகுதி மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற அவர் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். தேர்தல் பணிகளில் கட்சியினரும் கூட்டணி தோழர்களும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன