வில்லியனூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

புதுச்சேரி: புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வில்லியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
வில்லியனூர் தென் கோபுர வீதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வில்லியனூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான ராஜவேலு, வெங்கடேசன் மற்றும் அன்பு ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய அமைச்சர், மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
