புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் கடலில் இறங்கி குளித்த சுற்றுலாப் பயணிகள்: வீடியோ எடுத்து எச்சரித்த பெண் காவலர்!

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தான முறையில் கடலில் இறங்கி குளித்த சுற்றுலாப் பயணிகளை, பெண் காவலர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து எச்சரித்து வெளியேற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரிக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், கடற்கரைக்கு வருபவர்களில் சிலர் கடலின் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கும் போக்கு தொடர்கிறது. இதன் காரணமாக கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் துயர சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கடலில் மூழ்கி 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடற்கரைப் பகுதியில் சிலர் ஆபத்தான முறையில் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர், அவர்களின் ஆபத்தான செயலைத் தனது செல்போனில் வீடியோ எடுத்தவாறே உடனடியாகக் கடலில் இருந்து வெளியேறுமாறு கடுமையாக எச்சரித்தார். இதையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் கடலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.

சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் பெண் காவலர் மேற்கொண்ட இந்தத் துரித நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன