புதுச்சேரி

புதுச்சேரியில் அதிகாலை முதல் மிதமான மழை: செப்டம்பர் பிற்பாதியில் மேலும் தீவிரமடையும் என வானிலை தகவல்!

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. நகரின் அனைத்துப் பகுதி வானிலை கண்காணிப்பு மையங்களிலும் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை பதிவர்கள் கணித்திருந்த நிலையில், இன்று அதிகாலை முதலே புதுச்சேரி நகர், உழவர்கரை, வில்லியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

மேலும், செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது பாதியில் புதுச்சேரி மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு நீடிக்கும் என்றும், வரும் நாட்களில் கூடுதல் மழைப்பொழிவுக்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன