காரைக்கால்

காரைக்கால்: அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார் எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் மருத்துவருமான டாக்டர் V. விக்னேஸ்வரன் எம்.பி.பி.எஸ்., சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்குப் புதிய சீருடைகளை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து மாணவர்களிடையே உரையாற்றிய அவர், அரசு வழங்கும் கல்வி நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, கல்வியில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியப் பெருமக்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சீருடை வழங்கியமைக்காகப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சட்டமன்ற உறுப்பினருக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன