புதுச்சேரி

வில்லியனூரில் 125 நாள் வேலை திட்ட நாட்களை அதிகரிக்க எம்.எல்.ஏ. ரவிக்குமாரிடம் பயனாளிகள் கோரிக்கை: உடனடி நடவடிக்கை!

புதுச்சேரி: வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 125 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி நாட்களை உயர்த்தி வழங்கக் கோரி, சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமாரிடம் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் கோரிக்கை விடுத்தனர்.

வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமார் இன்று தனது தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களைச் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 125 நாள் வேலை திட்டப் பயனாளிகள் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதல் வேலை நாட்களை வழங்கிட வேண்டும் என மனு அளித்து முறையிட்டனர்.

பொதுமக்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமார், உடனடியாக சம்பந்தப்பட்ட இளநிலைப் பொறியாளர் (J.E.) செங்கதிரை சம்பவ இடத்திற்கு நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தினார். பொதுமக்களின் நியாயமான கோரிக்கைக்கு எவ்வித தாமதமுமின்றி உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, துறை ரீதியாக உரிய பரிசீலனை செய்யப்பட்டு வேலை நாட்களை உயர்த்தி வழங்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன