அரசியல்

கேரளாவில் விசிக விருதுகள் வழங்கும் விழா: வி.டி.சதீசனுக்கு மகாத்மா அய்யன்காளி விருது வழங்கினார் திருமாவளவன்!

திருவனந்தபுரம்: கேரள மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா தலைநகர் திருவனந்தபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நேரில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்த விழாவில் சமூகப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ‘மகாத்மா அய்யன்காளி விருது’ திரு. வி.டி. சதீசன் அவர்களுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவனால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமூக நீதி மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராளியான மகாத்மா அய்யன்காளியின் பெயரிலான இந்த விருது வழங்கும் விழாவில், கேரள மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன