காரைக்கால்

நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதியில் 43 அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வேண்டும்: அமைச்சர் சிவகொழுந்திடம் எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் கோரிக்கை

காரைக்கால்: நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 43 அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவகொழுந்திடம் வலியுறுத்தியுள்ளார்.

நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதியில் இயங்கி வரும் சில அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள பல அங்கன்வாடி கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, சில மையங்களில் கழிப்பறை வசதி இல்லாததால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், உதவியாளர்கள் மற்றும் அங்கு வரும் சிறு குழந்தைகள் தினசரி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, இத்தொகுதியில் உள்ள 43 அங்கன்வாடி மையங்களையும் உரிய அதிகாரிகள் மூலம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார். தேவையான இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டவும், பழுதடைந்த கட்டிடங்களை புனரமைக்கவும், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வேண்டும் என அமைச்சரிடம் அவர் நேரில் கோரிக்கை வைத்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன