காரைக்கால்
காரைக்காலில் வீட்டில் இயங்கிய விபச்சார விடுதி: 3 இளம்பெண்கள் மீட்பு, 2 பெண்கள் கைது!
காரைக்கால்:
காரைக்கால் இலைக்காரத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தனிப்படை காவல்துறையினர் குறிப்பிட்ட அந்த இல்லத்தில் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி சோதனையின்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 3 இளம்பெண்களைக் காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், இத்தொழிலை முன்னின்று நடத்தி வந்த 2 பெண்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றும் அங்கிருந்து தப்பியோடிய முக்கிய நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காரைக்காலின் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இந்த திடீர் போலீஸ் சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.