காரைக்கால்
காரைக்காலில் பாஜக மாவட்ட பயிற்சி முகாம்: கட்சியின் வரலாறு மற்றும் கொள்கைகள் குறித்து விவாதம்!
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கான சிறப்பு மாவட்ட பயிற்சி முகாம் காரைக்காலில் எழுச்சியுடன் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் பாஜக மூத்த நிர்வாகி செல்வம் வேலாயுதம் கலந்துகொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் கட்சியின் வரலாற்றுப் பின்னணி குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு விரிவாக எடுத்துரைத்துப் பேசினார். மேலும் கட்சியின் கொள்கைகள், மக்கள் நலப் பணிகள் மற்றும் கட்சி அமைப்பை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், பாஜக விவசாய அணியின் மாநில துணைத் தலைவர் ராஜவேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் காரைக்கால் மாவட்ட பாஜக பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
