புதுச்சேரி

முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகரில் ரூ.20.83 லட்சத்தில் புதிய மின்மாற்றி: எம்.எல்.ஏ கா.ஐயப்பன் நடவடிக்கை!

புதுச்சேரி, மார்ச் 29: அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கம், அன்னை தெரசா நகர் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த மின்தடைப் பிரச்சனைக்குத் தீர்வாக, ரூ.20.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு இன்று மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படுகிறது.

அன்னை தெரசா நகர் பகுதியில் அடிக்கடி மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தப் பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. ஐயப்பனிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ கா. ஐயப்பன், மின்துறை உயர் அதிகாரிகளுடன் பேசி அப்பகுதியில் புதிய மின்மாற்றி (Transformer) அமைக்கத் துரித நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, மின்துறை சார்பில் ரூ.20,83,021 திட்ட மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.

இப்புதிய மின்மாற்றி இன்று மாலை 4.30 மணியளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் கா. ஐயப்பன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன