புதுச்சேரி

விவசாய நிலங்கள் குறைந்ததால் வேளாண் துறைக்கு நிதி குறைவு: முதல்வர் ரங்கசாமி விளக்கம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் விவசாய நிலங்களின் பரப்பளவு பெருமளவு குறைந்துவிட்டதன் காரணமாகவே வேளாண் துறைக்குக் குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் என்.ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இது தொடர்பாகப் பேசிய முதலமைச்சர், யூனியன் பிரதேசத்தில் கடந்த காலங்களில் சுமார் 30,000 ஹெக்டேராக இருந்த விளைநிலங்களின் பரப்பு, நகர்மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 10,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. சாகுபடி பரப்பளவு மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்ட சூழலில்தான், துறைக்கான நிதி தேவையின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், விவசாய நிலங்கள் குறைந்து வரும் நிலையில், மாநில இளைஞர்களுக்குத் தேவையான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, புதிய தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தத் தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன