புதுச்சேரி

அரும்பார்த்தபுரத்தில் வாடகை பெயரில் முதியவரிடம் நகை திருட்டு; பெண் தீவிர தேடல்

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் நேர்வீதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற முதியவர், தனது வீட்டின் மாடியில் உள்ள இரண்டு அறைகளை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு வைத்திருந்தார். கணவரை இழந்து, பிள்ளைகள் தனியாக வசிக்கும் நிலையில் தனியாக வீட்டில் இருந்த ஜெயலட்சுமியிடம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடகை வீடு பார்ப்பதாக கூறி வந்து, மாடி அறையின் சாவியை பெற்றுச் சென்றார். சிறிது நேரம் கழித்து, கணவர் வரவில்லை எனக் கூறி சாவியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். பின்னர் வீட்டினுள் இருந்த பீரோவை திறந்து பார்த்த ஜெயலட்சுமிக்கு, தங்கச் சங்கிலி, வளையல், மோதிரம், காதணி உள்பட 28 பவுண் நகைகளும் ஒரு லட்சம் ரொக்கமும் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து ரெடியார்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பரிசீலித்து சந்தேக நபரை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன